CBSE 12-ஆம் வகுப்பு தேர்வு பாடமான ஹிந்தி பாட வினாத்தால் ஆனது WhatsApp, Youtube போன்ற சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் தகவல்கள் உன்மை அல்ல என CBSE தெரிவித்துள்ளது!
CBSE 12-ஆம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10-ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்ததால், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என கடந்த மார்ச் 28-ம் தேதி CBSE அறிவித்தது.
பின்னர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவிக்கையில்...
வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் ரத்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 10 ஆம் வகப்பிற்கான தேர்வின் தேதி 15 தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார், மேலும் 10 ஆம் வகுப்பிற்கான தேர்வானது டெல்லி மற்றும் ஹரியான பகுதிகளில் மட்டுமே நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல, முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும், இந்த விவக்காரம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் SSC, NEET பயிற்சி மாணவர்கள் மற்றும் CBSE மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
A fake question paper of Class 12- Hindi (Elective) is being circulated on Social Media platforms like Whatsapp, YouTube etc, it is not the real one: CBSE statement. #CBSEPaperLeak
— ANI (@ANI) March 31, 2018
பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் அடுத்ததாக தற்போது இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்டில் 9 சிறுவர்கள் உள்பட பயிற்சி மைய உரிமையாளர் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னர் கிடைத்துள்ள தகவலின் படி... 12-ஆம் வகுப்பு தேர்வு பாடமான ஹிந்தி பாட வினாத்தால் ஆனது WhatsApp, Youtube போன்ற சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் தகவல்கள் உன்மை அல்ல என CBSE தெரிவித்துள்ளது.