ஹராரே: தென்ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது மாஷோலாந்து என்கிற மாகாணம்.அந்த மாகாணத்தின் மசோவ் என்ற நகரில் பல நாட்களாக தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் சீனா உள்பட பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும்,அதுமட்டுமல்லாது ஏராளமான உள்ளூர் மக்களும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில்,இந்த தங்க சுரங்கத்தில் கடந்த வியாழக்கிழமையன்று மாலை வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தொழிலாளர்கள் அனைவரும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தங்க சுரங்கத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின.இந்த விபத்தால் சுரங்கம் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் சீனர்கள் 5 தொழிலாளர்கள், ஜிம்பாப்வேயை சேர்ந்த 2 தொழிலாளர்கள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த கோர விபத்தில் தொழிலாளர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதையடுத்து இந்த எதிர்பாராத கோர விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ பிட்காயின் தயாரிக்க எரிமலை மூலம் மின்சாரம்! புதிய யுக்தியை பயன்படுத்தும் நாடு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR