இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் எரிவாயு வாங்கவும் அன்றாட தேவைகளை வாங்குவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பலர் நாட்டை விட்டே வெளியேறி வருகின்றனர். நாளுக்குநாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற அவையில் பேசிய விஷயம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அதிபர் புதினின் ரகசிய காதலியை நாடுகடத்த 61,000 பேர் மனு!
”30 ஆண்டுகாலம் பிரபாகரன் போர்செய்தும் அழிக்க முடியாத இலங்கையை கோத்தபய ராஜபக்ஷே இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டார்” என்று பேசியிருக்கிறார். இப்படியான ஒரு விஷயத்தை கார்டூனில் பார்த்ததாகவும் அதுதான் தற்போது இலங்கயில் நடந்து வருகிறது என்று வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க | அடங்காத வடகொரியா.! மீண்டும் ஆபத்தான ஏவுகணை சோதனை
மேலும் இலங்கையில் சிங்கள மக்களுக்கு நிலங்கள் உள்ளன. வடகிழக்கு மக்களுக்கு நிலங்கள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கு மட்டும் சொந்த நிலம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றத்திலேயே கோத்தபய ராஜபக்ஷே இலங்கையை அழித்துவிட்டார் என்று எம்.பி. பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G