’மக்களே தயவு செய்து குடிங்க’ மன்றாடும் ஜப்பான் அரசு; காரணம் இதுதான்

வரி வருவாய் குறைந்துவிட்டதால், மக்கள் அதிக குடிக்க வேண்டும் என ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 19, 2022, 08:45 PM IST
’மக்களே தயவு செய்து குடிங்க’ மன்றாடும் ஜப்பான் அரசு; காரணம் இதுதான் title=

மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்களையும் ஜப்பான் அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேகமாக சேக் விவா என்ற பிரச்சாரத்தை அந்நாட்டின் தேசிய வரி நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும், 20 வயதிலிருந்து 39 வயதுள்ள ஜப்பானியர்களிடம் நாட்டு மக்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? என அரசாங்கம் சார்பில் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.

சிறந்த யோசனைகளை வழங்குபவர்களுக்குப் பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனாவிற்கு பின்பு மாறிய வாழ்க்கைமுறை காரணமாகவே ஜப்பானில் மதுக் குடிக்கும் பழக்கம் குறைந்துள்ளது. அதற்கு முன்னரே படிப்படியாக ஜப்பான் மக்களிடையே இருந்த குடிப்பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 100 லிட்டர் மது அருந்திவந்துள்ளார். அதுவே 2020-ம் ஆண்டு ஒரு நபர் வெறும் 75 லிட்டர் மட்டுமே மது அருந்தும் அளவுக்குக் குறைந்துள்ளது.

மேலும் படிக்க | டீன் ஏஜ் பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்க இருக்கும் முதிர்ச்சி கருவை கலைக்க இருக்காது: நீதிமன்ற தீர்ப்பு

2011- ம் ஆண்டு ஜப்பானின் வரி வருவாயில் 3% சதவீதம் மது விற்பனையிலிருந்து வந்துள்ளது. அது 2020-ம் ஆண்டு 1.7% சதவீதமாக மாறியுள்ளது. இதனால் பல நூறு கோடிகள் நஷ்டம் ஜப்பான் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை சக ஊழியர்கள் மற்றும் சக வியாபாரிகளிடம் உள்ள உறவை மேம்படுத்தப் பெரும்பாலானோர் வெளியில் சென்று ஒன்றாக மது அருந்தி வந்தனர். கொரோனாவிற்கு பின்பு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் புரம் ஹோம் வழக்கம் அதிகமாகியுள்ளதால் வெளியில் சென்று மது அருந்துவது தேவையா என்று எல்லோரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையை மாற்ற புதிய யுக்திகளை கையில் எடுத்திருக்கிறது ஜப்பான் அரசு. உலக நாடுகள் ஜப்பானின் இந்த முடிவை வியப்பாக பார்க்கத் தொடங்கியுள்ளன. 

மேலும் படிக்க | Emergency Aid: இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் அவசரகால கடனுதவி தரும் ஆஸ்திரேலியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News