கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் இஸ்ரேல் தொடக்கத்தில் இருந்தே மிகத்தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியதோடு, உலகிலேயே இஸ்ரேல் தான் முதல் நாடாக 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியது. இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசின் திரிபான பிஏ1 மற்றும் பிஏ2 ஆகியவை ஒன்றிணைந்து உருவான புதிய உருமாறிய கொரோனா அண்மையில் இஸ்ரேலில் கண்டறியப்பட்டது. தற்போது இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனுடன் நஃப்தலி பென்னட் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மேலும் படிக்க | எனது 'நண்பர்' மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறேன்: இஸ்ரேல் பிரதமர்
வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹடேராவில் இரு போலீஸ்காரர்களை ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நஃப்தலி பென்னட் ஹடேரா சென்றுள்ளார். தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் நஃப்தலி பென்னட் வீட்டிலிருந்தபடியே ஆலோசனையை தொடர்வார் என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா-இஸ்ரேல் இடையேயான தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகை தரவிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமாராக பதவியேற்ற நஃப்தலி பென்னட்டை, கடந்த அக்டோபரில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சந்தித்த பிரதமர் மோடி இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசு முறை பயணமாக நஃப்தலி பென்னட் வரும் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இந்தியாவிற்கு வருகை தரவிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | உக்ரைன் போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR