வித்தியாசமான ட்விட்டர் பதிவுகளின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்ப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் அவர், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
தற்போது எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்து போனால்....இதைத் தெரிந்து கொள்வதும் நல்லதே எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டிற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் உக்ரைனுக்கு தொலைதொடர்பு சாதனங்களை வழங்கி வருவதாகவும், இந்த தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போரால் கலைந்த எலான் மஸ்கின் கனவு
மேலும், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் சாதனங்கள் உக்ரைன் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், உக்ரைன் நாஜிகளுக்கு உதவியதற்காக எலான் மஸ்க் விலை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
.@Rogozin sent this to Russian media pic.twitter.com/eMI08NnSby
— Elon Musk (@elonmusk) May 9, 2022
முன்னதாக, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததினால், அந்நாட்டின் இணையசேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலான் மஸ்க்கிடம் உதவி கோரினார். உடனடியாக தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் எலான் மஸ்க் உக்ரைனுக்கு இணைய சேவை வழங்கினார். இதனால் ரஷ்யாவில் இருந்து எலான் மஸ்க்கிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை: எலான் மஸ்க்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR