ஆப்கானிஸ்தானினுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மிகப்பெரிய ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகிள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த  பயங்கரவாத இயக்கமும் பொறுப்பெற்கவில்லை.

Last Updated : Nov 12, 2016, 01:04 PM IST
ஆப்கானிஸ்தானினுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு title=

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மிகப்பெரிய ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகிள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த  பயங்கரவாத இயக்கமும் பொறுப்பெற்கவில்லை.

ஆபாகானிஸ்தானின் பக்ரம் நகரில் அமெரிக்க ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான இந்த விமானப்படை தளத்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகி உள்ளனர். 

மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்க ராணுவத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, விமானப்படை தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறியதில் இருந்து அந்த தாக்குதல் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. காபூல் அருகே உள்ள பக்ராம் விமான தளம் அடிக்கடி தலீபான் பயங்கரவாத குழுவால் தாக்குதலுக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது. 

Trending News