உலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது

வரலாற்றில் உலகின் மிகவும் வயதான பறவை, விஸ்டம் அல்பாட்ராஸ், தனது 70 வயதில் மற்றொரு குஞ்சை வரவேற்றுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 5, 2021, 10:12 PM IST
  • உலகின் அதிக வயதான பறவை குஞ்சுகளை ஈன்றெடுக்கிறது
  • 70 வயதில் பறவை, அடைகாக்கும் அதிசயம்
  • ஆண்டுக்கு ஒரு முறை தான் முட்டையிடும்
உலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது title=

வரலாற்றில் உலகின் மிகவும் வயதான பறவை, விஸ்டம் அல்பாட்ராஸ், தனது 70 வயதில் மற்றொரு குஞ்சை வரவேற்றுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி வட பசிபிக் பகுதியில் உள்ள மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு காப்பகத்தில் (Midway Atoll national wildlife refuge) விஸ்டம் தனது புதிய குழந்தையை வரவேற்றது, அங்கு ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அல்பாட்ராஸ் (albatross) கூடுகளுக்குத் திரும்புகின்றன.

Wisdom என்ற பறவையும், அதன் துணையான அக்கேகாமாய் (Akeakamai) என இரண்டு பறவைகளும் குறைந்தபட்சம் 2012 ஆம் ஆண்டு முதல் தங்கள் குஞ்சுகளை ஈன்றெடுக்கின்றன. 2012 முதல் உயிரியலாளர்கள் முதன்முதலில் அக்கேகமாயைக் கண்காணித்து வருகின்றனர்.

Also Read | Meghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ?

US Fish and Wildlife Service உயிரியலாளர் டாக்டர் பெத் பிளின்ட் கூறுகையில், “இந்த பறவை விதிவிலக்கானதா என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்து மிகவும் வயதான பறவை இது.”

யு.எஸ்.எஃப்.டபிள்யூ.எஸ்ஸின் மதிப்பீட்டின்படி, விஸ்டம் தனது வாழ்நாளில் 30 க்கும் மேற்பட்ட குஞ்சுகளை ஈன்றெடுத்துள்ளது.

1930 களின் பிற்பகுதியில் இருந்து 260,000 க்கும் மேற்பட்ட தனிநபர் albatross அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு நீண்ட கால ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் 1956 இல் அது கண்காணிக்கப்படுகிறது.  
பேர்ட் லைஃப் ஆஸ்திரேலியாவின் தேசிய பொது விவகார மேலாளர் சீன் டூலியின் கூற்றுப்படி, ''இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே கூடு கட்டுகிறது.''

Also Read | Vatican: இராக்கிற்கு செல்லும் முதல் போப்பாண்டவர் Pope Francis

"அவர்களுக்கு எதிராக முரண்பாடுகளின் பட்டியல் நீண்டதாக உள்ளது. ஆனால், எப்போது ஏதாவது நிகழ்ந்தாலும் அது கொண்டாடத்தக்கது."

அல்பாட்ராஸ் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் முட்டையிடுவதில்லை, முட்டையிடும்போதும், அவை ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடுகின்றன. ஒவ்வொரு குஞ்சும் அதை இளமைப் பருவத்திற்கு மாற்றும் போது அல்பாட்ராஸ் இனத்தின் எதிர்காலத்திற்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

Also Read | வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள் எவை?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News