சீன வைரஸை முற்றிலும் அழிப்பேன்... அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

இடதுசாரி அரசியல்வாதிகள் நடத்தும் அவதூறு பிரச்சாரத்தை அனைத்து அமெரிக்கர்களும் நிராகரிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2020, 09:22 AM IST
  • இடதுசாரி அரசியல்வாதிகள் நடத்தும் அவதூறு பிரச்சாரத்தை அனைத்து அமெரிக்கர்களும் நிராகரிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.
  • வேலை வாய்ப்பு கல்வி போன்ற விஷயங்களில், தனது நிர்வாகத்தின் மகத்தான சாதனைகளையும் டிரம்ப் எடுத்துரைத்தார்.
சீன வைரஸை முற்றிலும் அழிப்பேன்... அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை title=

புதுடெல்லி: கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பின், வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நோய் தொற்றுக்கு பிறகு, முதல் முறையாக பொது உரையை நிகழ்த்தினார் . 

அவரது ஆதரவாளர்கள் 'சீனா'வின் சக்தியை ஒழிப்பதாக தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சென்ற வியாழக்கிழமை இரவு உறுதியானது. 

அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர், அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நான்கு நாட்கள் அங்கே சிகிச்சை பெற்ற பின்னர், அவர் திங்களன்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்தார்.

“நான் நன்றாக இருக்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நான் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ”என்று குடியரசுத் தலைவர் உறுதியளித்தார். சீனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்படும், ​​என வெள்ளை மாளிகையில் நடந்த பிரச்சார உரையில் கூறினார்.

"இது நம் நாட்டில் மிக முக்கியமான ஒரு தேர்தலாகும். எனவே வாக்களியுங்கள், நான் மக்களை நேசிக்கிறேன். "புளோரிடாவில் எங்களுக்கு ஒரு ஆதரவு உள்ளது. வட கரோலினாவில், நொவாடாவிலும்  பெரிய ஆதரவு உள்ளது. ஜார்ஜியா, டெக்சாஸ் என எல்லா இடங்களிலும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது ”என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்அ அவர், ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடென் மற்றும் அவரது துணையான கமலா ஹாரிஸ் ஆகியோர் இடதுசாரி அரசியல்வாதிகள் என்று அழைத்தார்.

 இடதுசாரி அரசியல்வாதிகள் நடத்தும் அவதூறு பிரச்சாரத்தை அனைத்து அமெரிக்கர்களும் நிராகரிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

வேலை வாய்ப்பு கல்வி போன்ற விஷயங்களில், தனது நிர்வாகத்தின் மகத்தான சாதனைகளையும் டிரம்ப் எடுத்துரைத்தார்.

மேலும் படிக்க | சும்மா எங்களையே குற்றம் சொல்லாதீங்க.. நாங்க தான் முதலில் சொன்னோம்: புலம்பும் சீனா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News