வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால், வரும் காலங்களில் இரு வல்லரசுகளுக்கும் இடையே கடும் மோதலை உலகம் காணக்கூடும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) நிர்வாகம் 24 ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளது. தூதாண்மை அதிகாரி அனடோலி அன்டோனோவை மெற்கோள் காட்டிய செய்தி நிறுவனமான ஷின்ஹுவா, பெரும்பாலான தூதாண்மை அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா விசா வழங்கும் நடைமுறைகளை திடீரென கடுமையாக்கியுள்ளதே இதற்குக் காரணமாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிற்காக மட்டுமே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன
அமெரிக்காவுக்கான (America) ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் வாஷிங்டனின் பத்திரிகை 'தி நேஷனல் இன்டரஸ்ட்' உடன் உரையாடினார். அப்போது அவர், ‘எங்களுக்கு தூதாண்மை அதிகாரிகளின் ஒரு பட்டியல் கிடைத்தது. இவர்கள் 3, 2021 க்கு முன்னர் அமெரிக்காவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: ரஷ்யா அமெரிக்கா மோதல் முற்றுகிறதா; அமெரிக்க ராஜீய அதிகாரிகளை வெளியேற்றிய ரஷ்யா
டிசம்பர் 2020 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை ரஷ்ய தூதர்களுக்கான நியமன காலத்திற்கு மூன்று வருட வரம்பை ஏற்படுத்தியது. நமக்குத் தெரிந்தவரை, இந்த விதி வேறு எந்த நாட்டிற்கும் பொருந்தாது.’ என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதிலளித்தது
அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், அனடோலியின் கருத்துகளுக்கு பதிலளித்து, ரஷ்யர்களுக்கான விசாக்களின் செல்லுபடிக்கு மூன்று ஆண்டுகால வரம்பு இருப்பது புதிதல்ல என்று கூறினார். விசா காலாவதியான பிறகு அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுவதும், தங்க விரும்பினால் நீட்டிப்புக்கு விண்ணப்பிப்பதும் சகஜம்தான் என்றார் அவர்.
ரஷ்யாவும் அமெரிக்காவும் தற்போது பல பிரச்சினைகளில் பிளவுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதை அமெரிக்காவும் ஒரு சதியாகவே பார்க்கிறது. இது தவிர, அமெரிக்க தேர்தலில் உளவு பார்த்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன.
உறவு மேம்படுவதற்கான நம்பிக்கை சிதைந்தது
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஏப்ரல் 15 அன்று தேர்தல் தலையீடு மற்றும் சைபர் தாக்குதல்களில் ரஷ்ய ஈடுபாடு காரணமாக 10 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது. சமீபத்தில், பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்தித்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உருவானது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் இந்த பதட்டம் தொடர்ந்தால், அமெரிக்க-ரஷ்யா தகராறு கணிசமாக அதிகரிக்கும் என்று நிபுணர்களும் நம்புகின்றனர்.
ALSO READ: ரஷ்யாவில் நவால்னி உடல் நிலை கவலைக்கிடம்; புடினை எச்சரிக்கும் உலக நாடுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR