மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரத்லாமில், ஒரு தம்பதியினர் பிபிஇ கிட் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இயங்க அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு (Coronavirus Restrictions) உள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளபடியால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு இருக்கும்.
தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை ஏப்ரல் மாதம் 26 முதல் அமலுக்கு வரும் என அறுவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றுக்கு இல்லை என காணலாம்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.