ரஷ்ய அதிபராக மீண்டும் பதவியேற்றார் புதின்!

கடந்த மார்ச் மாதம் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின், நான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றுள்ளார்!

Last Updated : May 7, 2018, 08:17 PM IST
ரஷ்ய அதிபராக மீண்டும் பதவியேற்றார் புதின்! title=

கடந்த மார்ச் மாதம் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின், நான்காவது முறையாக ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றுள்ளார். 

பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட கிரம்ளின் மஹாலில் இன்று நடந்த இந்த பதவியேற்பு விழாவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

இந்த பதவி ஏற்பு விழாவில் தற்போது புதின் பேசும்போது...!

நாட்டை அனைத்து துறையிலும் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் அனைத்து வாய்ப்புகளும் நம்மிடம் உள்ளன என்றார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் புதின் 75 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எனினும் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டன.

கடந்த 18 ஆண்டுகளாக புதின் அதிகாரத்தில் உள்ளார். ஆனால், இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சர்வதேச பார்வையாளர்களால் கூறப்பட்டது. சனிக்கிழமையன்று மாஸ்கோ மற்றும் மற்ற ரஷ்ய நகரங்களில் புதின் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுடன் வன்முறை தடுப்பு ரஷ்ய காவல்துறையினர் மோதினர்.

ரஷ்யா முழுவதும் 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாதிபேர் மாஸ்கோவில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரஷ்யாவில் ஜனநாயகத்தை வலுவிழக்கும் செயலை புதின் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருவது குறிபிடத்தக்கது.

Trending News