Yamaha YZF-R15 பைக், புதிய நிறத்தில் அறிமுகம்!

புதிய சில்வர் கலர் நிறத்தை தவிர, YZF-R15 மோட்டார் சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 06:19 PM IST
Yamaha YZF-R15 பைக், புதிய நிறத்தில் அறிமுகம்! title=

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளுள் ஒன்றான Yamaha YZF-R15 பைக்கிற்கு புதிய நிறம் தேர்வு மலேசிய நாட்டு சந்தையில் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளில் (Bike) மிகவும் மலிவான ஆரம்ப-நிலை ஸ்போர்ட்ஸ் பைக்காக Yamaha R15 பல வெளிநாட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்தகைய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் தான் தற்போது இந்த யமஹா பைக்கிற்கு புதிய நிறத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய யமஹா (Yamaha) பைக்கில் மஞ்சள் நிற சக்கரங்கள் உள்ளது. மேலும் இதற்கு ஏற்ப க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் தலைக்கீழான முன்பக்க ஃபோர்க்குகள் என சஸ்பென்ஷன் அமைப்பும் ப்ரீமியம் தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ALSO READ | பைக் காப்பீடு எடுக்கும் முன்பே இந்த 5 முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்

இந்தியாவில் Yamaha YZF ஆர்15 பைக்கில் சஸ்பென்ஷனிற்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் தான் முன்பக்கத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்களுக்கு ஏற்றப்படி முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க் ட்யுப்கள் தங்க நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து மற்ற பாகங்களான, இரட்டை-பேட் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பிளவுப்பட்ட வடிவில் இருக்கைகள் உள்ளிட்டவற்றுடன் பைக்கின் வடிவம் அப்படியே தொடரப்பட்டுள்ளது.

ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தோற்றம் யமஹாவின் பிரபலமான ஒய்இசட்எஃப்-ஆர்1 என்ற ட்ராக் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆர்15 பைக்கில் 155சிசி, லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், எஸ்ஒஎச்சி, 4-வால்வு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை யமஹா நிறுவனம் வழங்குகிறது. இந்த என்ஜின் அமைப்பில் வெவ்வேறான வால்வு இயக்கம் (VVA) தொழிற்நுட்பத்தையும் இணைப்பதாக யமஹா தெரிவிக்கிறது. இந்த புதிய நிற பைக் தற்போது மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News