உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2024, 02:08 PM IST
  • தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா குழுவினர் பேஜர்களை பயன்படுத்தி வந்தனர்.
  • பல நாடுகள் சுகாதாரத் துறைகளில் பேஜர்களை பயன்படுத்துகின்றன.
  • ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறியதால், மக்கள் பீதியில் உறைந்தனர்.
உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி.. title=

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், குறுகிய நேர இடவெளியில், ஆயிரக்கணக்கான பேஜர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பீதியில் உறைந்தனர்.

தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா குழுவினர், தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்காக பேஜர்களை பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், இஸ்ரேல் அதன் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதலை நடத்தி பேஜர்களை வெடிக்க வைத்துள்ளது. இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்ப, மொபைல் போன்களுக்கு பதிலாக பேஜர்களை பயன்படுத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேஜர்களின் வகைகள் (Types Of Pagers)

ஒரு வழி பேஜர்: இந்த வகை பேஜர்களில் செய்திகளை பெறும் வசதி மட்டுமே உள்ளது.

இருவழி பேஜர்: இந்த வகை பேஜரில் செய்திகளை அனுப்புதல் மற்றும் பெறுதல் ஆகிய இரண்டு வசதிகளும் உள்ளன.

வாய்ஸ் பேஜர்: இந்த வகை பேஜரில் குரல் செய்திகளை அனுப்பவும் பெறவும் வசதி உள்ளது.

பேஜர்களை செயல்படும் முறை

ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்தி பேஜர்கள் மூலம் செய்திகளை அனுப்பவும் பெறவும் செய்யலாம்.

நெட்வொர்க்: இது ஒரு நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க் செய்தியை பேஜர் சாதனத்திற்கு அனுப்புகிறது.

செய்தி: ஒரு செய்தி அனுப்பப்பட்டால், அது நெட்வொர்க் மூலம் பேஜரை அடைகிறது மற்றும் பேஜர் பீப் அல்லது அதிர்வு மூலம் செய்தி வந்திருப்பதை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க | அமேசனில் பண்டிகை கால சலுகை... எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75% வரை தள்ளுபடி

பேஜர் இன்னும் பயன்பாட்டில் உள்ள நாடுகள்

அமெரிக்கா: அமெரிக்காவில் மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையில் பேஜர்கள் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.

கனடா: கனடாவில் சுகாதார சேவைகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் பேஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

பிரிட்டன்: பிரிட்டன் தேசிய சுகாதார சேவையில் பேஜர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பேஜர்கள் இன்னும் இங்கே செயலில் உள்ளனர்.

ஜப்பான்: ஜப்பானிலும் சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பேஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இது தவிர, பல நாடுகள் சுகாதாரத் துறைகளில் பேஜர்களை பயன்படுத்துகின்றன.

பேஜர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த லெபனான் பாதுகாப்பு துறை, பேஜர்கள் தைவானைத் தளமாகக் கொண்ட கோல்ட் அப்பல்லோவிலிருந்து வாங்கப்பட்டதாக கூறியது. எனினும் கோல்ட் அப்பல்லோ நிறுவனம் ஒரு அறிக்கையில், இதனை மறுத்து, பேஜர் சாதனங்களை தனது நிறுவனம் தயாரிக்கவில்லை என்று கூறியது. மேலும் அவை BAC என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகவும், தனது பிராண்டைப் பயன்படுத்த உரிமம் பெற்றுள்ளதாகவும் கூறியது., ஆனால்  இது குறித்த கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. லெபனான் பாதுகாப்பு த்துறை மூத்த அதிகாரி, பேஜர் தாக்குதல் குறித்து கூறுகையில், கோல்ட் அப்பல்லோவிலிருந்து 5,000 பேஜர்களை வாங்க ஆர்டர் செய்துள்ளதாகவும், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | உங்கள் வேலையை எளிதாக்கும்... சில முக்கிய Gmail அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News