ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் வழங்கும் புதிய ப்ரீபெய்டு திட்டங்கள்!

தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் போன்றவை 1 மாத வேலிடிட்டியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 8, 2022, 10:17 PM IST
  • 30 அல்லது 31 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது.
  • ஏர்டெல் நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.296க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.
  • VI 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.327க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.
ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் வழங்கும் புதிய ப்ரீபெய்டு திட்டங்கள்! title=

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1 மாத வேலிடிட்டியுடன் புதிய ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.  ஏற்கனவே 28 நாட்கள் வெளிடிட்டியுடன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 30 அல்லது 31 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ப்ரீபெய்டு திட்டங்களை வழங்குகிறது.  அந்த வகையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ஐடியா போன்றவை வழங்கக்கூடிய ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

ஏர்டெல் நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.296க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.  இதன் மூலம் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 மெசேஜ்கள் மற்றும் 1 மாதத்திற்கு 25ஜிபி டேட்டா கிடைக்கிறது.  இதில் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் டேட்டா முடிந்துவிட்டால் 50 பைசா செலுத்தி கூடுதல் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.  அடுத்ததாக இந்நிறுவனத்தின் ரூ.319 ப்ரீபெய்டு திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 மெசேஜ்கள் மற்றும் 1 மாதத்திற்கு 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் டேட்டா முடிந்துவிட்டால் இதன் வேகம் 64kbps ஆக குறைகிறது.

அடுத்ததாக ஜியோ நிறுவனமும்  30 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.296க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.  இது அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 மெசேஜ்கள் மற்றும் 1 மாதத்திற்கு அதிவேக 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது.  மேலும் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகிறது, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.209க்கு வழங்கப்படும் இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 மெசேஜ்கள் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

வோடஃபோன் ஐடியா நிறுவனமானது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.327க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.  இது அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 மெசேஜ்கள் மற்றும் 1 மாதத்திற்கு 25ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இதில் எஃப்யுபி லிமிட் கிடையாது.  மேலும் இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 31 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.337க்கு ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.  இதன் மூலம் அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 மெசேஜ்கள் மற்றும் 1 மாதத்திற்கு 28ஜிபி டேட்டாவை பெறமுடியும்.

மேலும் படிக்க | ரூ.549-க்கு விற்பனைக்கு வந்திருக்கும் Realme C31 ஸ்மார்ட்போன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News