ஏர்டெல்லை வம்பிழுக்கிறதே ஜியோவுக்கு வேலையா போச்சு! 2 ஜிபி டேட்டா ரேட் இவ்வளவு தான்

Jio Recharge: ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியாவை வம்பிழுக்கும் விதமாக டேட்டா பூஸ்டரை மிக குறைந்த விலையில் வழங்குகிறது ஜியோ 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2022, 08:26 PM IST
ஏர்டெல்லை வம்பிழுக்கிறதே ஜியோவுக்கு வேலையா போச்சு! 2 ஜிபி டேட்டா ரேட் இவ்வளவு தான் title=

Jio Data Plan: நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் அன்றாட டேட்டா முடிந்தவுடன் டேட்டா பூஸ்டரை ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் விரும்பும் திட்டமாக இருக்கும் டேட்டா பூஸ்டர் மிகவும் மலிவு விலையிலும் கிடைக்கிறது. ஜியோவிடம் இருக்கும் மலிவு விலை டேட்டா பூஸ்ரை திட்டத்தை பற்றி தான் நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். 

ஜியோ டேட்டா பூஸ்டர்

ஜியோவின் மிக குறைந்த விலையில் இருக்கும் டேட்டா பூஸ்டரின் அடிப்படை விலை ரூ.25. நாள்தோறும் அதிக டேட்டாவை பயன்படுத்த வேண்டியிருந்தால், இந்த டேட்டா பூஸ்டர் உங்களுக்கு உதவியாக இருக்கும். மிகவும் மலிவு விலையில் இருக்கும் டேட்டா பூஸ்டர் மூலம் உங்களின் தடைபட்ட வேலைகளை நீங்கள் செய்து கொள்ளலாம். உதாரணமாக, கிரிக்கெட் அல்லது படம் பார்க்கிறீர்கள் என்றால், அந்த நொடியில் டேட்டா தீரும்போது வெறும் 25 ரூபாய் செலவழித்து நீங்கள் 2 ஜிபி டேட்டாவை ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க | அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் இலவசம் தான்! ஆனால் இவங்களுக்கு இல்லை - ஜியோவின் தில்லாலங்கடி

டேட்டா பூஸ்டர் வேலிடிட்டி

ஜியோவின் இந்த 2 ஜிபி டேட்டா பூஸ்டர் என்பது அதிவேக இணையத்தை உங்களுக்கு கொடுக்கும். இதன் மூலம் உங்களின் வேலைகளை நீங்கள் எளிதாக முடித்துவிடலாம். இதன் வேலிடிட்டி என்னவென்றால், தற்போது நிலுவையில் இருக்கும் பிளானின் வேலிடிட்டி வரை இந்த 2 ஜிபி டேட்டா பிளானும் ஆக்டிவாக இருக்கும். ஏர்டெல், வோடஃபோனுடன் ஒப்பிடும்போது ஜியோவின் டேட்டா பூஸ்டர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்கிறது. 

மேலும் படிக்க | ஐபோனைக் கூட பாதியில் விலையில் விற்பனை செய்யும் இணைய தளம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News