ரூ.549-க்கு விற்பனைக்கு வந்திருக்கும் Realme C31 ஸ்மார்ட்போன்

குறைந்த பட்ஜெட்டில் போன் வாங்க காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு, ரியல் மீ சி13 ஸ்மார்ட்போனை வாங்க சரியான நேரம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 08:12 PM IST
  • பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தது ரியல்மீ சி13
  • முதல் நாள் விற்பனையில் அசத்தல் ஆஃபர்கள்
  • வெறும் 549 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்
ரூ.549-க்கு விற்பனைக்கு வந்திருக்கும் Realme C31 ஸ்மார்ட்போன் title=

வழக்கமான நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், ஆஃபர் நேரத்தில் நினைத்து பார்க்க முடியாத விலையில் வாங்கலாம். அப்படியான ஆஃபரை தான் ரியல்மீ வெளியிட்டுள்ளது. இப்போது பிளிப்கார்ட்டில் சென்று கொண்டிருக்கும் ஆஃபரில் வெறும் 549 ரூபாய்க்கு Realme C31 ஸ்மார்ட்போனை வாங்கலாம். 

பிளிப்கார்ட் ஆஃபர்

பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ள Realme C31 ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஆஃபர்களை வழங்கியுள்ளது. 8999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்போனை நீங்கள் SBI அல்லது HDFC வங்கிகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், அப்போதே ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | மாருதி கார் வாங்க திட்டம் இருந்தால் முந்துங்கள்: விலை உயர்வு விரைவில்

549 ரூபாய்க்கு வாங்குவது எப்படி?

ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெற்ற உங்களுக்கு ஆஃபர் அவ்வளவு தான் என நினைத்துவிடாதீர்கள். உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் ரியல்மீ நிறுவனம் கொடுக்கிறது. அதன்படி பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக 8,450 ரூபாய் வரை ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் நீங்கள் ரியல்மீ C31 ஸ்மார்ட்போனை வெறும் 549 ரூபாய்க்கு வாங்க முடியும். 

மேலும் படிக்க | அசத்தலான பிளிப்கார்ட் சேல்: விவோ லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனில் ரூ. 15,000 தள்ளுபடி

Realme C31 அம்சங்கள்

Realme C31 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை உங்களுக்கு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்நெல் சேமிப்பு வழங்கப்படுகிறது. யூனிசாக் 612 செயலியில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில், மூன்று பின்புற கேமரா இருக்கிறது. இதில் பிரதான சென்சார் 13MP, இரண்டாவது சென்சார் 2MP மற்றும் மூன்றாவது லென்ஸ் 0.3MP என்ற அளவில் இருக்கும். செல்ஃபி கேமரா 5 MP -யில் கொடுக்கப்பட்டுள்ளது. 6.52 இன்ச் எச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இந்த 4ஜி ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News