ஆப்பிள் நிறுவனம் மிக விரைவில் மலிவான 5G ஐபோனை அறிமுகப்படுத்தக்கூடும். தற்போதைய iPhone SE இல் 5G ஆப்ஷன் இல்லை. புதிய பதிப்பில் இந்த அம்சத்தையும் சேர்த்து அசத்தலான போனை நிறுவனம் வெளியிடும் என ஊகிக்கப்படுகின்றது.
இப்படி நடந்தால் பல ஆண்ட்ராய்டு பயனர்கள் ஐபோனை (iPhone) நோக்கி வரக்கூடும். ப்ளூம்பெர்க் பத்திரிகையாளரும் நீண்டகால ஆப்பிள் டிராக்கருமான மார்க் குர்மன் தனது சமீபத்திய செய்திமடலில் iPhone SE 3 அறிமுகம் ஆகவுள்ளதாகத் தெரிவித்தார். மார்ச் அல்லது ஏப்ரல் 2022 இல் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நிகழ்வின் போது இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போனின் பெயர் iPhone SE 3 ஆக இருக்குமா அல்லது iPhone SE 2022 ஆக இருக்குமா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவில் iPhone SE 3 5G-யின் விலை
ஐபோன் SE 3 பற்றிய மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், iPhone 12 மற்றும் iPhone 13 தொடர்களை விட மலிவான விலையில் 5G இணைப்பு அறிமுகம் ஆகிறது. iPhone SE 3 இன் விலை சுமார் $400 (ரூ. 29,531) அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் ஒரு போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், ஆப்பிளின் (Apple) இந்த போன் அறிமுகம் ஆகும் வரை காத்திருந்து அதன் விலை மற்றும் அம்சங்களைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து, பின்னர் முடிவெடுப்பது நல்லது.
ALSO READ | Google: பிரைவசிக்காக கூகுள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்
iPhone SE 3 5G பழைய வடிவமைப்பில் வரக்கூடும்
iPhone SE இன் முதல் பதிப்பு 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபோன் எஸ்இ அதிக பணம் செலவழிக்க விரும்பாத பயனர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது iPhone 6S மற்றும் 6S Plus உடன் இயங்கும் மலிவான விருப்பமாகும். மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் iPhone SE 3 ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone SE 3 5G இல் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை அறிந்து கொள்வோம்.
iPhone SE 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு
4.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் முன்பக்கத்தில் உள்ள டச் ஐடி பொத்தான் போன்ற ஐபோன் 8-க்கான வடிவமைப்பின் பெரும்பகுதி புதிய போனில் இருக்கும். இருப்பினும், இது ஐபோன் 8 ஐ விட அதிக சக்திவாய்ந்த கூறுகளுடன் உள்ளது. இதில் வேகமான செயலி மற்றும் அதிக திறன் கொண்ட கேமரா உள்ளது. தற்போதைய SE ஃபோனில் 7MP ஃப்ரெண்ட்-ஃபேசிங்க் கேமரா மட்டுமே உள்ளது. வரவிருக்கும் ஹெட்செட்டில் நைட் மோட், சினிமாடிக் மோட் மற்றும் ஃபோட்டோகிராஃபிக் ஸ்டைலுடன் 12MP சென்சார் பேக் ஆகியவை இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.
இந்த போனில் A15 பயோனிக் சிப் உடன் 3ஜிபி ரேம் தொகுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iPhone தொடரைப் போல மற்றும் ஐபோன் 12 உடன் ஒத்துப்போகும் ஒரு கேமரா உள்ளது. இது தவிர, iPhone SE 3 கைப்பேசியானது 128GB வரையிலான ஸ்டோரேஜ் பூஸ்டை பெறும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | ஷாக் கொடுத்த Apple நிறுவனம்: iPhone 13 பற்றிய அதிர்ச்சி செய்தி!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR