வரும் 23 ஆம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரட்சாரங்கள் சூடுபிடித்து வருகிறது. இதை தொடர்ந்து, வரும் 19 ஆம் தேதியில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுடன் சேர்த்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அதிகமாக பொய் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். 1987ஆம் ஆண்டு பேரணியின்போது அத்வானியை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுத்து ஈ மெயிலில் அவருக்கு அனுப்பி வைத்ததாக மோடி பேசியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் கேமராவுமில்லை ஈமெயிலும் இல்லை என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மகளிர் நலனை கருத்தில் கொண்டு சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இப்போது மகளிர் குழுக்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. திமுக ஆட்சியில் இருந்ததைப் போல, கேபிள் கட்டணம் ரூ. 100-ஆகக் குறைக்கப்படும். 5 பவுன் வரையிலான நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிவத்தார்.