காலையில் சிவகார்த்திகேயன் சென்ற வாக்குசாவடியில் அவரது பெயர் இல்லாததால், அவரால் வாக்களிக்க முடியவில்லை. ஆனால் அவரின் பெயர் வேறொரு வாக்குசாவடியில் இருந்ததால், அங்கு சென்று வாக்களித்தார். இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்கு உங்கள் உரிமை - உங்கள் உரிமைக்காக வாக்கு செலுத்துங்கள்" எனக் கூறியுள்ளார்.
Voting is your right and fight for your right pic.twitter.com/lYyu2LyWKZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 18, 2019
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், சமூக சேவகர்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது அடைந்ததால், வாக்காளர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், ஒரு அதிர்ச்சிக்கரமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் ரோபோ சங்கர் மற்றும் குணசித்திர நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் தங்கள் வாக்கை செலுத்த வாக்குசாவடிக்கு சென்றுள்ளனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இல்லாததால், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.