”பதவி கிடைத்த பிறகே இபிஎஸ் சுயரூபம் தெரிந்தது” - டிடிவி தினகரன் விமர்சனம்!

TTV Dinakaran Speech About Admk : அதிமுகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 30, 2022, 06:10 PM IST
  • ‘பதவி கிடைத்த பிறகுதான் எடப்பாடியின் சுயரூபம் தெரிந்தது’
  • ‘தேர்தல் வெற்றிபெற்றுதான் அதிமுகவை மீட்டெடுப்போம்’
  • அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
”பதவி கிடைத்த பிறகே இபிஎஸ் சுயரூபம் தெரிந்தது” - டிடிவி தினகரன் விமர்சனம்! title=

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்த பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
அப்போது அவர் பேசியதாவது, 

மேலும் படிக்க | 'அன்புள்ள அண்ணன்... உங்கள் செயல்கள் ஏற்புடையதாக இல்லை' - ஓ.பி.எஸ்க்கு இ.பி.எஸ் பதில் கடிதம்

‘உள்ளாட்சி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக பொதுக்குழுவை அராஜக போக்குடன் நடத்தியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றுதான் அதிமுகவை மீட்டெடுப்போம். அதிமுக என்பது வேற கட்சி. நான் அமமுகவின் பொதுச்செயலாளர். இரண்டு பேரும் பதவி சண்டை போடுவதில் நாங்கள் தலையிட முடியாது. அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 

ஆட்சி இருக்கும்வரை சரியாக போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது ஆட்சி முடிந்தவுடன் ஒற்றமை தலைமை, இரட்டை தலைமை என சண்டை போட்டு கொண்டிருக்கின்றனர். தவறானவர்கள் கையில் இரட்டை இலை போய்விட்டது. ஓ.பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நடந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. நிர்வாகிகளை வைத்து ஒற்றை தலைமை ஆகிவிட வேண்டும் என நினைப்பது தவறான ஒன்று. இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான், அன்றே தொண்டர்களால்தான் பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் சட்டம் கொண்டு வந்திருக்கிறார். 

அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்கிறதா, இல்லையா என எனக்கு தெரியாது. தேர்தல் அரசியலில் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம் என கூறியிருந்தேன். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2023 இறுதியில் யாருடன் கூட்டணி என அறிவிப்போம். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி கொடுத்த பிறகு தான் அவருடைய சுயரூபம் தெரிந்தது. எப்படியாவது நிர்வாகிகளை வைத்து சூழ்ச்சி செய்து ஒற்றை தலைமை ஆகிவிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தியாகமும் செய்ய தயார்" என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க | EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News