பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் 7 மணி நேரம் மின்வெட்டு!

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் 7 மணி நேரம் மின்வெட்டு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது! 

Last Updated : Dec 10, 2018, 08:21 AM IST
பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் 7 மணி நேரம் மின்வெட்டு! title=

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் 7 மணி நேரம் மின்வெட்டு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது! 

சென்னையில் இன்று (10.12.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (7 மணி நேரம்) மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம்  நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி நாளை மின்வெட்டு நிகழும் இடங்கள்....

  • பட்டினம்பாக்கம் பகுதி: பட்டினம்பாக்கம், டி.என்.எச்.பி. குடியிருப்பு, சீனிவாசபுரம், டூமிங் குப்பம், மந்தவெளிப்பாக்கம், சாந்தோம் ஹைரோடு, போலிஸ் குடியிருப்பு, ரோஹினி கார்டன், கற்பகம் அவென்யு, டீமான்டி தெரு, லீத் கேசல் தெற்கு, மத்திய மற்றும் வடக்கு தெரு, தெற்கு கடற்கரை சாலை, நார்டன் ரோடு மற்றும் நார்டன் 1 முதல் 4-வது தெரு, டி.எஸ்.வி.கோவில் தெரு, ஆதாம் தெரு, கேசவப் பெருமாள் கோயில் தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாடா தெரு, வி.கே.ஐயர் ரோடு, மசூதி தெரு, 1 முதல் 6-வது மற்றும் 11 முதல் 14-வது டிரஸ்ட் குறுக்கு தெரு, கச்சேரி ரோடு, பஜார் ரோடு, நொச்சிக்குப்பம், நொச்சி நகர், அப்பு தெரு, தேவடி தெரு, அப்பு முதலி தெரு, ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, புதுப்பள்ளி தெரு, டூமிங் தெரு, சித்திரகுளம் வடக்கு மற்றும் தெற்கு தெரு, நடுத் தெரு, குயில் தோட்டம், சி.ஐ.டி. குடியிருப்பு, திடீர் நகர், சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, கஸ்டன் பீச் ரோடு, மாதா சர்ச் ரோடு.

 

Trending News