தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், IIT, IIM, AIIMS உள்ளிட்ட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் OBC பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு...தமிழக அரசு
சாதிவாரி கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து நடத்திட வேண்டும், மாநிலங்களின் தேவைக்கேற்ப இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் - இதற்காக அரசியலமைப்பில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். OBC இட ஒதுக்கீட்டில், வளமான பிரிவினரை ( Creamy Layer ) நீக்காமல் செயல்படுத்திட வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலையர், அம்பலக்காரர் இனத்தை சேர்ந்த மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த "வலையர் அம்பலக்காரர் புனரமைப்பு வாரியம்" அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தை ஹஜ் புறப்பாட்டுத் தளமாக அறிவிக்குமாறு மாநில அரசு, ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், கடந்த 11 மாதங்களில் 14 லட்சம் சதுர அடியிலான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR