தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது!
விவசாயத்தை காக்கும் காவிரி அன்னையை போற்றும் வகையில், தமிழ் மாதமான ஆடி 18 ஆம் தேதி, ஆடிப் பெருக்கு என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த நல்ல நாளில் புது மண தம்பதிகள் மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து அணிந்து கொள்வதால், மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா டெல்டா பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஆடிப்பெருக்கு என்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்னும் டெல்டா பகுதிகளை சென்றடையவில்லை. ஆனால் காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும் ஆடிப்பெருக்கு விழா களைகட்டி வருகிறது.
திருச்சி மண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து அணிந்து கொண்டு காவிரி தாயை வழிபட்டு சென்றனர். இதே போல், ஈரோடு சேலம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.