Annamalai Speech: தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் திமுகவுக்கும், பாஜக கட்சிக்கும் இடையேயான மோதலாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து, மாநில பாஜக நிர்வாகிகளுடன் தனது முதல் சந்திப்பை நடத்திய பின்னர், அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
2024 மக்களவைத் தேர்தல்: திமுக vs பாஜக நேரடி போட்டி
அப்பொழுது அவர், வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். ஏனென்றால் இங்கு திமுக ஆட்சியில் உள்ளது, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. இதை நான் இன்று சொல்லவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக சொல்லி வருகிறேன். தமிழகத்தை பொறுத்த வரை 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது திமுக vs பாஜக என இருக்கும்" என்று அண்ணாமலை கூறினார்.
பாஜகவை வலுப்படுத்துவதில் தான் எனது கவனம் - அண்ணாமலை
அதிமுக வெளியேறியதை குறித்து கேட்டதற்கு, ஒவ்வொரு கட்சியும் அதன் வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பாஜகவும் தனது வளர்ச்சியை நோக்கிச் செயல்பட்டு வருகிறது. யாராவது எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினாலோ அல்லது சேர்ந்தாலோ நான் மிகவும் சோகமாகவோ மகிழ்ச்சியாகவோ உணரக்கூடியவன் அல்ல. பாஜகவை வலுப்படுத்துவதிலேயே எனது கவனம் உள்ளது. கட்சி தொண்டர்களும் அவ்வாறே உணர்கிறார்கள். மற்ற கட்சிகள் தனக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களை பெரிதாக கண்டு கொள்வதில்லை. கட்சி முன்னோக்கி செல்ல வேண்டிய பாதையில் தனக்கு தெளிவு இருப்பதாக அவர் கூறினார்,
மேலும் படிக்க - அண்ணாமலை வருவதற்கு லேட்... நேரு புகைப்படம்...சீனியர்கள் அப்செட்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக தலைமையில் கூட்டணி
தமிழகத்தில் கூட்டணி குறித்த கட்சியின் முடிவை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல வேட்பாளர்கள் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்.
தங்களைப் பொறுத்த வரை 2024-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கான தேர்தல் என்றும், மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி அதை நோக்கிச் செயல்படுவோம் என்றும் அண்ணாமலை கூறினார்.
39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டதால், மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக உருவாக்கும். 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். 2024 தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, அப்போதுதான் பொதுமக்கள் யாருடைய பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க - AIADMK Vs BJP: டெல்லியில் அண்ணாமலை.. அமைதியாக இருங்கள்.. எச்சரித்த மேலிடம்!
2024-இல் திமுக VS பாஜக -அண்ணாமலை
அதிமுக-வை புறக்கணிக்கிறதா பாஜக ?#ZeeTamilNews #ADMK #DMK #LokSabhaElection2024 #dmkvsbjp #edapadipalaniswamy #MKStalin #Annamalai #vivadhamandram
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/Jjvk5P9moR— Zee Tamil News (@ZeeTamilNews) October 5, 2023
சி.என். அண்ணாதுரை குறித்து கேள்வி
தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை பற்றிய தனது கருத்துக்களில் நீங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அண்ணாமலை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் சில மூத்த தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது - கே.பழனிசாமி
2019 லோக்சபா மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களை பாஜகவுடன் கூட்டணி வைத்து எதிர்கொண்ட அதிமுக, கடந்த வாரம் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் யார்?
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், எச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க - அண்ணாமலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி பளீச்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ