இஸ்லாம் மதத்தின் பிரபலமான பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்று. மேலும் இஸ்லாமியார்களின் 5 கடமைகளில் ரம்ஜான் நோன்பு 3ஆவது கடமை ஆகும்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் 2ஆம் தேதி பிறை பார்த்து அன்று முதல் ரமலான் நோன்பு இருந்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் ரமஜான் பிறை ஏப்ரல் 3ஆம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜியால் நோன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி இஸ்லாமியர்களும் அதிகாலை முதல் மாலைவரை தண்ணீர் எதுவும் பருகாமல், உணவு உண்ணாமல், தீய பழக்கங்களை செய்யாமல் கடந்த ஒரு மாதமாக நோன்பில் இருக்கின்றனர்.
ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசைக்கு அடுத்ததாக தென்படும் பிறையை கணக்கிட்டு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது.
மேலும் படிக்க | 10, 11, 12 மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு
நோன்பு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து இன்றுவரை நோன்பு இருக்கும் மக்கள், நாளை மாலை இஃப்தாரில் நோன்பு திறந்த பின்னர் வானில் பிறை காண்பார்கள். பிறை தென்பட்டால் ரமலானை முடித்துவிட்டு ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகை பெருநாளாக கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR