சென்னை: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க்க உள்ளார். 542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக.
வரும் 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ரஜினி பதில் அளித்து பேசினார்.
செய்தியாளர்: நடிகர் கமல்ஹாசன் நடந்து முடிந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று பல இடங்களில் மூன்றாவது கட்சியாக வந்துள்ளார். அதுக்குறித்து உங்கள் கருத்து என்ன?
ரஜினிகாந்த்: ஒரு கட்சி ஆரம்பித்து 14 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகள் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்ற என்பது பெரிய விசியம். கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள் எனக் கூறினார்.