ஆவினில் ஊழலுக்கு ராஜேந்திர பாலாஜி தான் முழு காரணம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 04:39 PM IST
ஆவினில் ஊழலுக்கு ராஜேந்திர பாலாஜி தான் முழு காரணம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் title=

தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் இன்று தேனியில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார். முதற்கட்டமாக உழவர் சந்தை அருகே உள்ள ஆவின் விற்பனை நிலையம், பெரியகுளம்சாலை மற்றும் மதுரைசாலை சாலையில் உள்ள ஆவின் விற்பனை நிலையங்களைஆய்வு மேற்கொண்டார். அப்போது விற்பனை நிலையத்திற்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களுக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்தார். பின்னர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் (Aavin) குளிரூட்டும் நிலையத்திற்கு நேரடியாக சென்று பாலின் தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் பெயர் உள்ளது. அதில் எடப்பாடி பழனிச்சாமி பெயரும் உண்டு.

ALSO READ | கொரோனா தடுப்பூசியிலிருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறிய வாலிபர்!

அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji) மீது பல வழக்குகள் உள்ளது. விசாரணையில் 3 கோடி ரூபாய் ராஜேந்திரபாலாஜி வாங்கியது தெரியவந்துள்ளது.யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டும். ஆவினில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான். விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது திமுக எம்.எல்.ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் பெரியகுளம் சரவணக்குமார் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று நடைபெற்ற ஆய்வுகள் குறித்து துறை ரீதியான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முகமை அலுவலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற உள்ளது.

ALSO READ | பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் ஜனவரி 14 வரை விடுமுறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News