புதுச்சேரி: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களிலும், புதுவை யூனியன் பிரதேசத்திலும் நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் நாளை, அதாவது மே 2 ஆம் தேதி வெளிவரவுள்ளன. தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் வியாழனன்று வெளிவந்தன.
இந்த நிலையில், புதுச்சேரியின் (Puducherry) முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 30) தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நம்பமுடியாதவையாகவும் தவறானவையாகவும் உள்ளன என்று கூறினார்.
ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், கடந்த காலங்களிலும் தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் அடிப்படையற்ற பொய்யான கணிப்புகளாகவே இருந்துள்ளன என்று கூறினார்.
புதுச்சேரியைப் பொருத்தவரை, 2016 ல் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் (Exit Poll), ஏ.ஐ.என்.ஆர்.சி அரசாங்கத்தை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைத்து, தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
ALSO READ: Exit Poll 2021: புதுச்சேரியில் BJP கூட்டணி ஆட்சி அமைக்கும்: கருத்துகணிப்பில் தகவல்
30,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதியில் வெறும் 300 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த ஆண்டின் தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாக நாராயணசாமி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகளை நடத்தியவர்கள் வீட்குள்ளேயே இருந்தபடி இவற்றை நடத்தியது வேடிக்கை என்று மேலும் கூறினார் அவர்.
தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் நம்பமுடியாதவையாக இருந்துள்ளன என்றே கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது என்றார் வே. நாராயணசாமி.
ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின்போது புதுச்சேரியில் மக்கள் தனக்கு அதிக அளவிலான ஆதரவைக் காட்டியதை தன்னால் உணர முடிந்தது என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
"காங்கிரஸ்-திமுக கூட்டணி இந்த முறை பெரிய அளவில் வெற்றிபெறும், அரசாங்கத்தை அமைக்கும்" என்று நாராயணசாமி கூறினார்.
மேலும், தமிழ்நாட்டிலும் திமுக (DMK) தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் தமிழ்கத்தின் அடுத்த முதல்வராவார் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி இங்கு வெற்றி பெற்றால் புதுச்சேரி பாதுகாப்பாக இருக்காது என்றும் நாராயணசாமி கூறினார்.
"பாஜக விரித்திருக்கும் வலையில் விழ வேண்டாம் என புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்றும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி கருத்துக்கணிப்பு முடிவுகள் (மொத்த இடங்கள் - 30):
Zee News Maha Exit Poll:பாஜக + - 19, காங்கிரஸ் + - 10, மற்றவை - 1
Republic-CNX:பாஜக + - 16-20, காங்கிரஸ் + - 11-13, மற்றவை - 0
ABP News - C Voter:பாஜக +: 19-23, காங்கிரஸ் + - 6-10, மற்றவை: 1-2
ALSO READ: அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR