பொதுநிகழ்ச்சிகளில் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் ஒவ்வொரு அசைவுகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, டெல்லியில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்கப்பாதையை திறந்து வைப்பதற்காகச் சென்ற பிரதமர் மோடி, அங்கு செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லியின் பிரகதி மைதான் பகுதியில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு சுரங்கப்பாதையும், ஐந்து சிறு சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டே முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இத்திட்டம் ஆறு முறை தள்ளிவைக்கப்பட்டு அண்மையில் பணிகள் மொத்தமும் முடிக்கப்பட்டன. 1.6 கிமீ நீளமான இந்த சுரங்கப்பாதை டெல்லியின் மதுரா சாலை மற்றும் பைரோன் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு நொய்டா, இந்தியா கேட், காஜியாபாத் போன்ற மற்ற பகுதிகளுக்கும் மக்கள் எளிமையாகப் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், இன்று பிரதமர் மோடி இதனைத் திறந்து வைத்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, சோம் பிரகாஷ், அனுப்ரியா படேல் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதற்கிடையில், புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அருகில் சில குப்பைகள் இருந்துள்ளது. இதனை வெறும் கைகளால் பிரதமர் மோடி அள்ளினார்.
அங்கிருந்த குப்பைகளை அவர் வெறும் கைகளால் அகற்றியுள்ளார். சுரங்கப்பாதையில் நடந்து செல்கையில் அங்கு போடப்பட்டிருந்த காலி தண்ணீர் பாட்டில் மற்றும் பிற குப்பைகளை அவர் அப்புறப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi picks up litter at the newly launched ITPO tunnel built under Pragati Maidan Integrated Transit Corridor, in Delhi
(Source: PMO) pic.twitter.com/mlbiTy0TsR
— ANI (@ANI) June 19, 2022
இதற்கு முன்னதாக, பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அச்சந்திப்பையொட்டி, மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி, காலை நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார்.
எனவே, குப்பைகளைக் அகற்றுவதில் பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் படிக்க | தென் இந்திய மாநிலங்களை குறிவைத்து பாஜகவின் 'மிஷன் சவுத்' திட்டம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR