தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலை,மதுரவாயல் - சென்னை துறைமுகம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3ஆவது ரயில் பாதை, 506 கோடியில் மதுரை தேனி அகல ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்திலிருந்து ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு சென்ற அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மேலும் படிக்க | ஒன்றிய அரசு என குறிப்பிட்ட ஸ்டாலின்... பதிலடி கொடுத்த மோடி! என்ன நடந்தது?
அப்போது பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலப்பதிகாரம் புத்தகத்தை பரிசளித்தார். இதனையடுத்து அவர் நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்புகையில் தன்னிடம், ‘உங்கள் முடி ஏன் வெள்ளையாகிவிட்டது’ என நலம் விசாரித்ததாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அன்பு அதிர்ச்சி.
நெகிழ்ந்து தான் போனேன். pic.twitter.com/eAynfOBnEY
— Narayanan Thirupathy (@Narayanan3) May 27, 2022
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பின் அதிர்ச்சி. நெகிழ்ந்துதான் போனேன்” என பதிவிட்டுள்ளார். மேலும், மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக, “ஒன்றிய அரசு, ஒன்றிய் ஆரசு என்று பலமுறை கூறி புளகாங்கிதம் அடைந்தது ‘குன்றிய’ அரசு!.
— Narayanan Thirupathy (@Narayanan3) May 26, 2022
அப்போது கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு இப்போது அதை மீட்க வேண்டும் என கூக்குரலிடுவதுதான் திராவிட மாடலா?. குடியை கொடுத்து, குடியை கெடுத்ததுதான் திராவிட மாடல்! எனவும் பதிவிட்டுள்ளார்.
— Narayanan Thirupathy (@Narayanan3) May 27, 2022
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR