நீதிபதி கருத்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்க தடை நீடிக்கும் நிலை..

Last Updated : Oct 27, 2017, 08:31 AM IST
நீதிபதி கருத்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்க தடை நீடிக்கும் நிலை.. title=

சாலை மற்றும் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதால் தங்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், பிளக்ஸ் பேனர், சைன் போர்டு போன்றவற்றை சாலை மற்றும் பொது இடங்களில் வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

ஆனால், சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சி தரப்பு முறையிட்டனர். 

ஆனால் உயர் நீதிமன்றம் நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க முடியாது. மற்ற வழக்கு போல அதற்கான நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறினார்.

இதனால் உயிருடன் உள்ளவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை வைக்க தடை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News