தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருந்தது. தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், தமிழ்நாட்டில் நாங்கள் தான் கூட்டணிக்கு தலைமை என அதிமுக தொடர்ச்சியாக சொல்லி வந்தது. ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக செயல்பாட்டையும், அக்கட்சி பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். இதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் அதிமுக அமைதி காத்து வந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவை நேரடியாக விமர்சிக்க தொடங்கினார் அண்ணாமலை (Annamalai).
மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்
ஊழல் செய்து சிறைக்கு சென்றவர் ஜெயலலிதா, அதனால் தான் அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார் என்று விமர்சித்தார். அவரின் இந்த பேச்சுக்குப் பிறகு அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் எழத் தொடங்கியது. அதிமுகவும் பதிலடி கொடுக்க தொடங்கியது. ஜெயக்குமார், செல்லூர் ராஜூ என வரிசையாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டி, அவரால் சொந்த தொகுதியிலேயே ஜெயிக்க முடியாது என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினார். இந்தவார்த்தை போர் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அதிமுகவுடன் பாஜக இனி மீண்டும் கூட்டணி அமைக்காது, அதனை மாநில தலைவராக தான் இருக்கும் வரை நடக்காது என்று வெளிப்படையாக அறிவித்தார்.
அவரின் இந்த பேச்சுக்குப் பிறகு அதிமுக, பாஜக கூட்டணி உறவு என்பது முடிவுக்கு வந்தது. அதிமுகவும் இதையே எதிர்பார்த்து இருந்தது. ஏனென்றால் அதிமுகவின் வாக்குவங்கியில் தான் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவர்களே முனுமுனுக்க தொடங்கினர். அப்படியான சூழலில் ஜெயலலிதா ஊழல்வாதி என்ற சொன்னதை வைத்து பாஜகவுடனான உறவை முடித்துக் கொண்ட அதிமுக, தன்னுடைய இருபதை நிலைநாட்டவும் தமிழ்நாட்டில் திமுகவுக்கு நிகரான கட்சி தாங்கள் மட்டுமே என்பதை வெளிக்காட்டவும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலேயே கூட்டணி என அறிவித்துவிட்டது.
அதாவது, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றும் வெளிப்படையாக அறிவித்ததுவிட்டது. ஆனால், டெல்லி பாஜக மேலிடம் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என விரும்புகிறது. அமித்ஷா இதனை வெளிப்படையாக கூறிய நிலையில், பல்லடம் வந்த பிரதமர் மோடியும் (Modi) திமுகவை விமர்சித்துவிட்டு ஜெயலலிதா மற்றும் எம்ஜிர் ஆகியோருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆர் வகுத்த கொள்கையில் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக சிறந்த நிர்வாகத்தை ஜெயலலிதா கொடுத்தார் என பிரதமர் மோடி பேசினார். அத்துடன் தனக்கும் ஜெயலலிதாவுக்கும் பல ஆண்டுகால நட்பு இருந்ததை குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவை ஊழல்வாதி என அண்ணாமலை கூறிய நிலையில், அவரது நிர்வாகத்தை பிரதமர் மோடி வெகுவாக புகழ்ந்திருப்பது, பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை கூட்டணிக்குள் இடம்பெற வைக்கவும், அதிமுகவின் வாக்குகளை குறிவைக்கவுமே பிரதமர் மோடி இப்படி பேசியிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அத்துடன், ஊழல்வாதி என ஜெயலலிதாவை குறிப்பிட்ட பாஜக இப்போது அவரை புகழ்வதால், மீண்டும் அந்த கட்சியுடன் கூட்டணிக்கு அதிமுக செல்லுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ