மாமன்னன் திரைப்படம் வெளியான தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 29, 2023, 01:08 PM IST
  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம், மாமன்னன்.
  • இந்த படத்திற்கு அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
  • திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் திரையரங்குகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாமன்னன் திரைப்படம் வெளியான தியேட்டர்களில் அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...! title=

நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் மாமன்ன. இந்த படம், இன்று வெளிவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

‘தேவர்மகன்’ பட சர்ச்சை..

இன்று வெளிவந்துள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இவர், கமல் நடித்திருந்த ‘தேவர் மகன்’ படம் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றினை படவிழாவில் பேசினார். இது, பல்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சயினர் மத்தியில் பேசுபொருளானது. இதனால் மாமன்னன் படத்தை வெளியிட கூடாது என பலர் போர்கொடி பிடித்து வந்தனர். இந்த எதிர்ப்புகளை மீறி இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இன்று, இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

படத்திற்கு எதிர்ப்பு…

மாமன்னன் படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருப்பதாக கூறி படத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர். மாரி செல்வராஜ் ஜாதி மோதல் ஏற்படும் வகையில் பல பொய்யான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறி பல்வேறு ஃபார்வர்டு பிளாக் அமைப்பினர் தென் தமிழகத்தில் போஸ்டர்களை அடித்து ஒட்டி உள்ளனர்.

திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்..

திண்டுக்கல்லில் ஒரு சில திரையரங்குகளில் மாமன்னன் படம் வெளியானது. குறிப்பாக ஆர்த்தி தியேட்டர், ராஜேந்திரா தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகளில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே இன்று மாறி செல்வராஜின் பேச்சு தென் தமிழகத்தில் ஜாதிய மோதல் உருவாகும் வாய்ப்புள்ளதாக கூறி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் சாலையில் 20க்கும் மேற்பட்டோர் மாமன்னன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மாமன்னன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திரையரங்கு மற்றும் அந்த சாலை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேனியில் போலீஸ் பாதுகாப்பு..

திண்டுக்கல் மாவட்டத்தை போலவே தேனி மாவட்டத்திலும் ‘மாமன்னன்’ படத்தி்கு எதிர்ப்புகள் வலுத்திருந்தது. தேனியில், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புகளுக்கு இடையே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது.

போராட்டக்காரர்கள் கைது..

இன்று தேனி பழனிச்செட்டிபட்டி வெற்றி சினிமாஸ் திரையில் 11.30 மணிக்கு மாமன்னன் திரைப்படம் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றி சினிமாஸ் திரையரங்கை முற்றுகையிட தமிழ் தேசிய பார்வேடு பிளாக் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி 10 க்கு போற்பட்டோரை கைது செய்தனர். 

இந்த சம்பவத்தை அடுத்து, நேதாஜி பார்வேடு பிளாக் கட்சியினர் மாமன்னன் படத்தை திரையிடக்கூடாது என்றும் கலவரத்தை தூண்டும் விதமாக பேசும் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யக்கோரியும் திரையரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் காரணமாக திரையரங்கத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புகளுக்கு இடையே போலீஸ் பாதுகாப்புடன் மாமன்னன் திரைப்படம் வெற்றி சினிமாஸில் திரையிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திரையரங்கத்திற்கு வந்த அகில இந்திய பார்வேடு பிளாக் கட்சியினர் மாமன்னன் திரைப்படத்திற்கு அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க | மாரி செல்வராஜின் சம்பவமா? மாரி செல்வராஜிற்கு சம்பவமா? ‘மாமன்னன்’ ட்விட்டர் விமர்சனம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News