Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 21) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 21, 2021, 07:55 AM IST
Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 21)  பெட்ரோல் டீசல் விலை நிலவரம் title=

Petrol Prices Latest Update: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), இந்தியன் ஆயில்(Indian Oil) , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை  தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ALSO READ | விரைவில் பெட்ரோல் 4 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைய வாய்ப்பு -முழு விவரம்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன், பெட்ரோல் விலை முந்தைய விலையிலிருந்து 12  காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.98.96 ஆக விற்பனை செய்யப்பட்டது.  அதே போன்று டீசல் விலை 12 காசுகள் குறைந்து ரூ. 93.26 என்ற விலையில் விற்கப்பட்டது. இன்றும், விலையில் மாற்றம் ஏதும் இன்றி இதே விலையில் விற்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு விலை மாறுகிறது
தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுகிறது. புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் பொருந்தும். பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிறவற்றைச் சேர்த்த பிறகு, அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் மாறுகின்றன, அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலை என்ன என்பதைப் பொறுத்து.

பெட்ரோல் டீசல் விலையை அறிந்து கொள்ளும் முறை
SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் விலையை அறிந்து கொள்ள, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் வேறுபட்டதாக இருக்கும். ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இந்த விபரங்களை காணலாம்.  BPCL வாடிக்கையாளர் தங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை  RSP 9223112222 மற்றும் HPCL வாடிக்கையாளர் HPPrice என 9222201122 ன்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ | இந்தியாவின் மிகச்சிறந்த மின்சார கார்கள்: இனி பெட்ரோல் விலை பற்றி கவலை வேண்டாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Trending News