46 ஆண்டுக்கு பிறகு கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்!!

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி 46 ஆண்டுகளுக்குப் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

Last Updated : Nov 20, 2017, 03:41 PM IST
46 ஆண்டுக்கு பிறகு கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்!! title=

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி 46 ஆண்டுகளுக்குப் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

கருணாநிதி அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி மிக தடிமனாக இருப்பதால், அது அவரது மூக்குப் பகுதியை அழுத்தி அதனால் அவருக்கு பிரச்னை ஏற்படுவதை மருத்துவர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு அவரது கண் பார்வைக்கு ஏற்ற வகையில் புதிய லேசான மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது.

46 ஆண்டுகளுக்கு முன்பு நேரிட்ட விபத்து ஒன்றில் இடது கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 1971ம் ஆண்டு அமெரிக்கா சென்று கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் கருணாநிதி. அப்போதிலிருந்து அந்த கறுப்பு கண்ணாடியையே கருணாநிதி பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய லேசான கண்ணாடியை கருணாநிதி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News