ஜெ., உடல்நிலை- அப்பல்லோவில் கட்டுக்கடங்காத கூட்டம், உஷார் நிலையில் போலீசார்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் தெரிந்ததும், அதிமுக தொண்டர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். 

Last Updated : Dec 5, 2016, 12:16 PM IST
ஜெ., உடல்நிலை- அப்பல்லோவில் கட்டுக்கடங்காத கூட்டம், உஷார் நிலையில் போலீசார் title=

புதுடெல்லி : முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் தெரிந்ததும், அதிமுக தொண்டர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். 

சென்னை முதல்வர் ஜெயலலிதா புறன குணம் அடைய மும்பையில் உள்ள தாராவி சக்தி விநாயகம் கோவிலில் மக்கள் பிரார்தனை செய்து வருகிறார்கள்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் வந்தது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் குவிந்து வருகின்றனர்.  முதல்வர் குணமாக வேண்டும் என அவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மேலும்  தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அதிமுக தொண்டர்களும், அமைச்சர்களும் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்து வருவதால் மருத்துவமனையை சுற்றி உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Trending News