ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுகிறார்- அதிமுக தகவல்!!

முதல் - அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார் என்று  அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நேற்று தெரிவித்தார். 

Last Updated : Nov 18, 2016, 08:40 AM IST
ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுகிறார்- அதிமுக தகவல்!! title=

சென்னை: முதல் - அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார் என்று  அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நேற்று தெரிவித்தார். 

மறுபுறம் ஜெயலலிதா பூரண குணம் அடைந்துவிட்டார் தற்போது அவர் பிசியோதெரபி எடுத்து வருகிறார் என்று அதிமுக பேச்சாளர் சி. பொன்னையன் கூறியுள்ளார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுகிறார் என்றும் தூங்கும் நேரத்தில் மட்டுமே செயற்கை சுவாசம் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், இந்த நல்ல முன்னேற்றம் காரணமாக அவர் தனி வார்டுக்கு மாற இருப்பதாக கூறப்படுகிறது.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 57-வது நாளாக தொடர் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறை கொண்ட சிறப்பு வார்டுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக் டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே,தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News