IPL 2024 CSK Vs RCB TN Department Of Transport Announces Free Bus : இந்தியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐ.பி.எல் சீசன் நாளை தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவிருக்கின்றன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
CSK Vs RCB:
தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, நாளை ஃபாஃப் டூ பிளசிஸ் (Faf du Plessis) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளது. நாளை இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியை காண பல லட்சம் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். வழக்கமாக, நேரில் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்டுகள் இந்த முறை முதல் முறையாக ஆன்லைனில் விற்கப்படுகிறது.
சென்னை vs பெங்களூரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த திங்கட்கிழமையன்று (மார்ச் 18) தொடங்கியது. ரூ.1,700 ரூபாயில் ஆரம்பித்த்து ரூ.7,500 வரை டிக்கெட்டுகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே பல லட்சம் பேர் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சி செய்த நிலையில், தற்போது ஒரு டிக்கெட் கூட இல்லாத அளவிற்கு அவை விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இலவச பேருந்து:
CSK Vs RCB போட்டியை காண சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு வருபவர்கள், தாங்கள் வாங்கிய ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கும் அதே போல் இலவசமாக செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குளிர் சாதனப் பேருந்துகளில் இந்த சலுகை இல்லை என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | கேப்டன்ஷிப்பில் ரோகித் பெஸ்ட், தோனி ரெண்டாவது இடம் தான் - முன்னாள் சிஎஸ்கே வீரர்
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகளின் போது, சேப்பாக்கத்தில் வந்து போட்டியை காண்பவர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை காண்பித்து மெட்ரோவில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியை காண நேரில் செல்பவர்களின் கவனத்திற்கு..
CSK vs RCB போட்டியை காண, சேப்பாக்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு சில அறிவுருத்தல்களும் வழிக்காட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
>எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு வருபவர்கள் பிளாஸ்டிக் பைகளையோ, அல்லது பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களையோ எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
>பொது மக்களுக்காக மைதானத்தில் ஆங்காங்கே RO வாட்டர் மெஷின் வைக்கப்பட்டுள்ளது.
>ஸ்டாண்ட் அல்லாமல், கிரவுண்டில் இருக்கும் இருக்கைகள் பிரத்யேகமாக மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
>போட்டியன்று, கேட்டுகள் மாலை 4:30 மணியில் இருந்து திறக்கப்படும்.
>ஸ்டேடியத்திற்குள் இருப்பவர்கள் ஒருமுறை வெளியேறினால் மீண்டும் போட்டி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2024: கமெண்ட்ரி செய்ய போகும் இதுவரை ஓய்வை அறிவிக்காத 5 கிரிக்கெட் வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ