எனக்கு பேனர் வேண்டாம்- மு.க.ஸ்டாலின்

திமுக தொண்டர்கள் தன்னை வரவேற்று பேனர் வைக்க வேண்டாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Last Updated : Jan 29, 2017, 01:56 PM IST
எனக்கு பேனர் வேண்டாம்- மு.க.ஸ்டாலின் title=

சென்னை: திமுக தொண்டர்கள் தன்னை வரவேற்று பேனர் வைக்க வேண்டாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-

திமுக தொண்டர்கள் ஆடம்பர பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். சாலையின் இரு புறமும் திமுக தொண்டர்கள் என்னை வரவேற்று பேனர்கள் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

பேனர்களை கண்டு பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதை எச்சரிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. சாலையின் இரு புரத்திலும், சாலையின் நடுவிலும் பேனர் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். என்ன நிகழ்ச்சி நடக்கிறது எங்கு நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க ஒரு இடத்தில் மட்டும் வைக்கலாம். 

பேனர்களில், பெரியார், அண்ணாத்துரை, கருணாநிதி, அன்பழகன் படங்கள் மட்டும் இருந்தால் போதும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பேனருக்கு பதில் திமுகவின் கொடிகள் பறப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News