2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின்போது திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு (Tamil Nadu) அதிகாரிகள் அடையார் ஆற்றின் குறுக்கே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம், நகரத்திற்கு நீர் வழங்கும் ஐந்து நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.
ALSO READ | Nivar Cyclone Updates: நெருங்கும் நிவர், தமிழகம், புதுச்சேரி ஆந்திராவில் உயர் எச்சரிக்கை நிலை
இதனையடுத்து இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் (Chembarambakkam Lake) இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. 9 கிலோமீட்டர் நீளமும் மொத்தம் 24 அடி உயரம் உள்ள இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும். அப்படியே அது கடலில் கலக்கும். ஏற்கனவே சென்னை (Chennai) வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி இன்று முழு கொள்ளவை எட்டிய நிலையில் உள்ளதால் இன்று செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டது.
தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து அதன் முழு கொள்ளளவான 22 அடியை நெருங்கிறது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும். அந்த வகையில் முழு கொள்ளவை எட்டியதால் 3 மதகுகளில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.
இதற்கிடையில் ஏரியில் வினாடிக்கு 50000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் உள்ளது. அச்சப்பட தேவையில்லை என்றும், ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ALSO READ | கஜா, நிவர் உட்பட தமிழகத்தை தாக்கிய அதிதீவிர புயல்கள் என்னென்ன?
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட முக்கிய அறிக்கையில், இன்று மதியம் 12 மணி அளவில் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதால் காவலூர், குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம். திருநீர்மலை வழிநிலை மேடுபகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதால் நீரை திறக்க ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR