புதுடெல்லி: இன்று உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார்.
இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதேவேளையில் விரைந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வும் உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பிப்ரவரி 18, 2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக கொறடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏ.கே. சிக்ரி என்ற நீதிதி தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது நீதிபதி ஏ.கே. சிக்ரி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு விசாரணை விசாரிக்காமலேயே நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனை மேற்கோள் காட்டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோடை கால விடுமுறைக்கு பின்பு, நேற்று உச்ச நீதிமன்றம் மீண்டும் தொடங்கியது. இதனையடுத்து, இன்று திமுக சார்பில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.