டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 13 பள்ளி மாணவ மாணவியர் மற்றும் 3 பள்ளி ஆசிரியர்கள் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ளனர். சென்னை திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவ மாணவியருடன் தங்கியுள்ள அவர்கள், மகாபலிபுரம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட பின்னர் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் சந்தித்து பேசினர்.
தமிழில் திருக்குறள் போன்றவற்றை கற்றுணர்ந்த அவர்கள் தமிழ்நாடு மற்றும் தமிழர் பண்பாடு குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன், தமிழ்வளர்ச்சித் துறை மொழி பெயர்ப்பு
இயக்குநர் முனைவர் அருள், ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் உயர் நிலைப்பள்ளியின் தாளார் திரு. விஷ்ணுசரன் பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவ மாணவியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.