என்ஜினீயரை கொள்ளையனாக மாற்றிய கொரோனா!

கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்த இன்ஜினியர் ஒருவர் கொள்ளையனாக மாறிய சம்பவம் சிசிடிவியால் அம்பலமானது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 01:15 PM IST
என்ஜினீயரை கொள்ளையனாக மாற்றிய கொரோனா! title=

ராமநாதபுரம்: கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்த இன்ஜினியர் ஒருவர் கொள்ளையனாக மாறிய சம்பவம் சிசிடிவியால் அம்பலமானது.  கொரோனா நோய் பரவல் காரணமாக பலருக்கும் தொழில்கள் முடங்கி வேலை இழப்பு அதிக அளவில் ஏற்பட்டது. இதனால் பலரும் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தது. இதுபோல் கொரோனா பரவலின் காரணமாக வேலை இழந்த இன்ஜினியர் ஒருவர் ATM மையத்தில் உள்ள இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ALSO READ என்ன ஆச்சு சென்னைக்கு? எல்லாருக்கும் காய்ச்சலா?!

ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் தேசிய வங்கியின் ATM மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த பகுதி எப்பொழுதும் ஆள்நடமாட்டத்துடன் பரபரப்பாக இருக்கும் ஒரு முக்கியமான பகுதியாகும்.  கடந்த 13-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் இந்த ATM மையத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் இரும்பு கம்பியை கொண்டு ATM இயந்திரத்தை உடைத்து, இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.  இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.   அதனை அடுத்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அதில் நள்ளிரவு 12.20 மணி அளவில் கண்ணாடி மற்றும் முக கவசம் அணிந்து ஒருவர் இரும்பு கம்பியை கொண்டு ஏடிஎம் உடைக்கும் காட்சி பதிவாகியிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் சுற்றித் இருந்ததைக் கண்டதும் அவரை பிடித்து விசாரணையை தொடங்கினர்.  அந்த நபர் அளித்த முன்னுக்குப்பின் முரணான தகவலால் ATM மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது அந்த நபர் தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.  உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர். 

atm

விசாரணையின்போது ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் வடக்கு பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன்(35) என்பது தெரியவந்தது.  என்ஜினியரிங் படித்துள்ள இவர் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்து வீட்டில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும் இவர் முதல் மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து, இரண்டாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து அவரையும் விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையும் பறிபோனது. அதனையடுத்து வேலை இழப்பு, மனைவியைப் பிரிந்தது, செலவிற்கு பணம் இல்லாமல் இருந்தது போன்ற பல காரணங்களால் மனமுடைந்து காணப்பட்டார். 

இந்நிலையில் மன அழுத்தத்திற்கு சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்த அவர், இந்த ATM கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  மேலும் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News