தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன் முறையாக 5 நாள் வெளிநாட்டு பயணமாக கடந்த வியாழக்கிமை துபாய் சென்றார். அங்கு தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கிருக்கும் தமிழர்களிடம் முதலமைசர் கலந்துரையாடினார். துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை தமிழகம் திரும்ப உள்ளார். இந்நிலையில் டெல்லியில் திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது, நீட் விவகாரம், ஜி.எஸ்.டி நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகமான கலைஞர் - அண்ணா அறிவாலயத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மத்திய பாஜக அரசை திமுக கடுமையாக விமர்சித்து வந்தாலும் திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்க உள்ளது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியுள்ளது.
மேலும் படிக்க | MK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR