கலைஞருடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் - மதுரையில் நெகிழ்ச்சி

மதுரையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் கலைஞர் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 15, 2023, 07:25 PM IST
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம்
  • மதுரையில் திறந்து வைத்த முதலமைச்சர்
  • கலைஞருடன் பேசி மகிழ்ந்தார்
கலைஞருடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் - மதுரையில் நெகிழ்ச்சி title=

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.120.75 கோடியில் உலகத் தரத்துக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.  இந்த நூலகம் 2,13,338 சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

6 தளங்களை கொண்டுள்ள இந்நூலகத்தின் அடித்தளத்தில் (19314 சதுரடி ) வாகன நிறுத்துமிடம், செய்தி, நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைக்கிறது. தரைத் தள பகுதியில் (32656) கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுபாட்டு அறை, தபால் பிரிவுகள் உள்ளன. 

முதல் தளம்த்தில் கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம்,பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்கள்பிரிவு (குறிப்பு உதவி நூல்கள் பிரிவு) மற்றும் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப் படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கிய தனிப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க |  இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... ரூ.1000 வாங்க டோக்கன் - இந்த தேதி முதல் விநியோகம்!

மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள் , ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நூல்கள் அடங்கிய பிரிவுகளும்,  நான்காவது தளத்தில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வர்களுக்கான பல்வேறு துறை சார்ந்த நூல்கள் பிரிவு இடம் பெற்றுள்ளன. ஐந்தாவது தளத்தில் அரிய நூல்கள், மின் நூலகம், பல்லூடகம், நூல்கள் பாதுகாத்தல், ஒளி, ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நூல், ஒலி நூல் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது தளத்தில் ஆங்கில நூல்கள் (நூல் இரவல் பிரிவு), நூல் பகுப்பாய்வு , நூல் பட்டியல் தயாரித்தல், நூலக நிர்வாகம், நூல்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகள் உள்ளன.

இத்தகைய அம்சம் கொண்ட நூலகத்தில் புதிய தொழில்நுட்பத்தில் முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியுடன் பேசும் வகையில் திரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த திரைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் அமர்ந்து கலைஞர் கருணாநிதியுடன் பேசி அளவளாவினர். 

மேலும் படிக்க | பொங்கலுக்கு வேட்டி, சேலை: நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News