இன்று ரம்ஜான் பண்டிகை! மசூதியில் சிறப்பு தொழுகை!!

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

Last Updated : Jun 16, 2018, 08:56 AM IST
இன்று ரம்ஜான் பண்டிகை! மசூதியில் சிறப்பு தொழுகை!! title=

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அந்த நோன்பின் கடைசி நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்றைய தினம் ரம்ஜான் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பிறை தெரியாததால் இன்றைய தினம் ரம்ஜான் பண்டிகை என்று தலைமை காஜி அறிவித்தார். இதையடுத்து இன்றைய தினம் நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

டெல்லியில் உள்ள புதழ்பெற்ற ஜாமா மஸ்ஜித் மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 

 

 

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு டெல்லி மட்டுமின்றி கோரக்பூர், ஜம்மு காஷ்மீர், மும்பை, தமிழகம் அனைத்து இடங்களிலும் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

 

 

Trending News