சென்னையில் பேக்கரிகளை திறக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி அளித்தது...

சென்னை நகரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்கும் என்று சென்னை கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

Last Updated : Apr 12, 2020, 04:03 PM IST
சென்னையில் பேக்கரிகளை திறக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி அளித்தது... title=

சென்னை நகரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்கும் என்று சென்னை கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்தது எனவும் சென்னை கார்ப்பரேஷன் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சென்னை கார்ப்பரேஷன் ஆணையர் பிரகாஷ் சமீபத்தில் ஒரு ட்வீட் மூலம் வெளியிட்டார்.

இதுதொடர்பாக இந்த ட்விட்டர் பதிவில் பதிவிடுகையில்., "பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் நாளை முதல் பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கலாம்." என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்போது, ரொட்டி, ரஸ்க், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பேக்கரிகளை சென்னை கார்ப்பரேஷன் வலியுறுத்தியுள்ளது.

கொரோன வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை தினசரி காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டும் நடைபெறுகிறது. இதன் போதும் பால், காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு மாநராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடுகளில் முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பேக்கரிகளை திறக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி அளித்துள்ளது. வீட்டில் அடைந்திருக்கும் மக்களுக்கு உணவு மட்டுமே கிடைத்து வருவதாலும், ஸ்நாக்ஸ் எதுவும் இல்லாமல் சிறு குழந்தைகள் வரை அவதிப்பட்டு வருவதாகவும் கோரிக்கை எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்களுக்கான நேர அனுமதியின் அடிப்படையிலேயே பேக்கரிகளும் இயங்கும் என சென்னை கார்ப்பரேஷன் ஆணையர் இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News