அண்ணா பல்கலை., மறுமதிப்பீடு மோசடியில் 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!!

சென்னை அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!!

Last Updated : May 29, 2019, 10:34 AM IST
அண்ணா பல்கலை., மறுமதிப்பீடு மோசடியில் 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!! title=

சென்னை அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட 4 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2017-18 ஆம் கல்வியாண்டு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தேர்வு காலங்களில் அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது. 

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள், 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் மாணவர்கள் ஓரிரு பக்கங்கள் மட்டும் பதில் எழுதி விட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் விடைத்தாள்களை கொடுத்துள்ளனர். அந்த விடைத்தாளை, தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர். எழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி, அந்த மாணவர்கள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். 

இதற்காக தேர்வு எழுதிய மாணவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் வாங்கி இருக்கின்றனர். இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. 

இந்தநிலையில், இந்த மோசடியில் தொடர்புடையதாக முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீநிவாசலு (srinivasalu), பேராசிரியர்கள் செல்வமணி, குலோத்துங்கன் மற்றும் புகழேந்தி சுகுமாறன் ஆகிய 4 பேராசிரியர்களை பல்கலைக்கழக பதிவாளர் குமார் பணிஇடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். 

 

Trending News