விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் AMMK போட்டியில்லை: TTV

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்!

Last Updated : Sep 22, 2019, 11:39 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் AMMK போட்டியில்லை: TTV title=

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்!

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் உள்ளனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகப்படியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற, அமமுக விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுகவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று கூறினார். அமமுகவிற்கு தனிச்சின்னம் ஒதுக்கும்வரை போட்டியிடப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

 

Trending News